உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கலுார் விநாயகர் சதுர்த்திக்காக விதவிதமான சிலைகள்

பொங்கலுார் விநாயகர் சதுர்த்திக்காக விதவிதமான சிலைகள்

பொங்கலுார்:வரும் செப்., 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா. இதற்காக, இந்து  முன்னணி சார்பில், பொங்கலுார் அலகுமலையில், விநாயகர் சிலை செய்யும்  பணி கடந்த சில மாதங் களாக நடந்து வருகிறது.வெளியூரைச் சேர்ந்த சிற்ப  கலைஞர்கள் இங்கு தங்கி சிலை தயாரி ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலை தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது, சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.  இந்த ஆண்டு புதிதாக என்பீல்டு விநாயகர் சிலைகள் தயார் செய்யப் பட்டுள்ளது.

மேலும், சிங்கமுகன், அனுமன், கருட விநாயகர்கள், முருகன் பார்வதி சுப்ரமணியர் சிவன் விநாயகர், ரதம், நரசிம்மன், பாகுபலி, நந்தி, மயில் வாகனம், தாமரை, மூஞ்சூறு, மான் விநாய கர் சிலைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

சிலைகள் மூன்று அடி முதல் அதிகபட்சமாக, 12 அடி உயரத்தில்  வடிவமைக்கப்பட்டுள்ளன. சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள் போர் வீரர்கள்  அணிவகுத்து நிற்பது போன்ற வரிசையாக நிற்பது காண்போர் மனதை வியக்க  வைக்கும் வகையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !