உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நகரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா

நகரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா

நகரி:நகரி அடுத்த, சிந்தாலப்பட்டடா கிராமத்தில் உள்ள, பெரியபாளையம், பவானி  அம்மன் கோவிலில், ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடந்தது.நேற்று  முன்தினம் (ஆக., 11ல்) காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.  

2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இரவு, 8:00  மணிக்கு, பவானி அம்மன் உற்சவராக எழுந்தருளி, சிந்தாலப்பட்டடா கிராம  வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆடிப்பூரா விழாவில்,  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !