வால்பாறை கோவிலை சூழ்ந்த மழை வெள்ளம்
                              ADDED :2271 days ago 
                            
                          
                           வால்பாறை:வால்பாறை அருகே, கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்ததால்  பக்தர்கள் கவலையில் உள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது உருளிக்கல் பெரியார்  நகர். இங்கு, 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், இப்பகுதி  பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் சோலையாறு அணை நீர்ப்பிடிப்பு  பகுதியில் மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால், கோவிலை சுற்றிலும் மழை வெள்ளம் சூழ்ந்தது.  இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அணைக்கு  தண்ணீர் வரத்து குறைந்தால்மட்டுமே கோவிலுக்கு செல்ல முடியும்.