உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயக்கன்பாளையம் அருகே ஸ்ரீசாய் சேவா பரிவார் அமைப்பு உதயம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே ஸ்ரீசாய் சேவா பரிவார் அமைப்பு உதயம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே தேசிய அளவிலான ஸ்ரீ சாய்  சேவா பரிவார் அமைப்பின், மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் நடந்தது. தேசிய  அளவில் உள்ள ஷீரடி சாய் பக்தர்கள் மற்றும் பல்வேறு சாய் அமைப்புகளின்  நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கோவையில் ஸ்ரீ சாய் சேவா பரிவார் என்ற  அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில் உள்ள ஷீரடி சாய் பைரவர்  கோவிலில், இவ்வமைப்பின், மாநில நிர்வாக குழு கூட்டம் நேற்று (ஆக., 12ல்) நடந்தது.

இதில், இவ்வமைப்பின் நிர்வாக தலைவராக சாய் செந்தில்குமார் நியமனம்  செய்யப்பட்டார். மேலும், பொது செயலாளராக திருநெல்வேலி பாபா கோவில்  நிர்வாகி தர்மேந்திரா, மாநில பொறுப்பாளர்களாக ஆடிட்டர் சம்பத், மாநில  செயலாளராக பொள்ளாச்சி சீனிவாசன், கோவை ஷீரடி குமார், ராமேஸ்வரம்  அசோகமித்ரன், கர்நாடக பாலா, துணை தலைவராக சென்னை அசோக்குமார்,  தாளவாடி ரவீந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில மகளிர் அணி தலைவராக ராஜபாளையம் கவிதா கார்த்திக், மாநில  மகளிர் அணி பொது செயலாளராக பரீத்திசாய் மற்றும் பல்வேறு மாவட்ட  பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில், இவ்வமைப்பு சார்பில்  உருவாக்கப்பட்ட கொடி அறிமுகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !