உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை மதுரைவீரன் கோவிலில் முப்பூஜை திருவிழா

குளித்தலை மதுரைவீரன் கோவிலில் முப்பூஜை திருவிழா

குளித்தலை: பாதிரிப்பட்டி கட்டாரி குளக்கரை மதுரைவீரன் கோவில் திருவிழா  விமரிசையாக நடந்தது. குளித்தலை அடுத்த பாதிரிப்பட்டியில், கட்டாரி  குளக்கரையில் அமைந்திருக்கும் விநாயகர், அக்னி பாப்பாத்தி, ரெங்கநாதார்,  கன்னிமாரம்மன், கருப்பசாமி, மதுரைவீரன், நந்தி, பட்டவன் சுவாமிகளுக்கு  திருவிழா நடந்தது.

இதில் பாதிரிப்பட்டி, மணப்பாறை வட்டம் விடத்திலாம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவு மக்கள் பங்கேற்றனர். நேற்று (ஆக., 12ல்)  முன்தினம் மாலை, கரகம் பாலித்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.  

அதன்பின், முப்பூஜை விழா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு கிடா வெட்டுதல்,  பொங்கல் வைத் தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் ஏராளமான  பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !