உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

குளித்தலை பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

குளித்தலை: குளித்தலை பகுதி சிவன் கோவில்களில், பிரதோஷ வழிபாடு  நடந்தது. குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் நேற்று (ஆக., 12ல்) மாலை, 5:00 மணிக்கு, நந்தீஸ்வரர்க்கு மஞ்சள், பால், தயிர், நெய், தேன், இளநீர், திருநீறு, பன்னீர் முதலான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது.

இதேபோல், பெரியபாலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், முத்து பூபால சமுத்திரம், அய்யர் மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில், சிவாயம்  சிவபுரீஸ்வரர் கோவில், மேட்டுமருதூர் ஆரா அமுதீஸ்வரர் கோவில் மற்றும்  ஆர்.டி.மலை, சின்னரெட்டிப்பட்டி சிவன் கோவில்களில், பிரோதஷ வழிபாடு  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !