இவர்களை வழிபட்டால் நல்ல நேரம் வரும்!
ADDED :2253 days ago
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் விசேஷமானவர். மூன்று கண்கள், நீண்ட பற்கள், ஆயுதம் தாங்கிய பதினாறு கைகளுடன் இவர் காட்சியளிக்கிறார். இவரது சிலையின் மீது பொறிக்கப்பட்டுள்ள மந்திரம், யந்திரங்கள் சக்தி மிக்கவை. இரண்யாசுரனை வதம் செய்த கோலத்தில் நரசிம்ம மூர்த்தியும் உடனிருக்கிறார். இவர்களை வழிபட்டால் நல்ல நேரம் வரும். கிரக தோஷம் நீங்கும். நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.