உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை, மழை வேண்டி விளக்கு பூஜை

உலக நன்மை, மழை வேண்டி விளக்கு பூஜை

 திருவொற்றியூர்:திருவொற்றியூரில், உலக நன்மை வேண்டி, முன்னாள் பள்ளி மாணவர்கள் சார்பில், விளக்கு பூஜை நடத்தப்பட்டது.

திருவொற்றியூர், பெரியார் நகரில், அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது.இங்கு, 1984ல் பணிபுரிந்த ஆசிரியை, ரேவதி மற்றும் அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து, ஆண்டுதோறும் ஆடி மாதம், கடைசி செவ்வாய் அன்று, வடிவுடையம்மன் கோவிலில், விளக்கு பூஜை நடத்துவது வழக்கம்.தொடர்ந்து, முன்னாள் மாணவ பிரதிநிதிகள் சார்பில், விளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.தற்போது, 34ம் ஆண்டாக, ஆடி மாதம், கடைசி செவ்வாயை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, வடிவுடையம்மன் சன்னிதியில், உற்சவ தாயார், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.இதில், 100க்கும் மேற்பட்டோர், குத்துவிளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.உலக நன்மை மற்றும் மழை வேண்டி, விளக்கு பூஜை நடத்தப்பட்டதாக, முன்னாள் மாணவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !