திருப்புவனம் திரவுபதி அம்மன் பூக்குழி உற்ஸவம்
ADDED :2286 days ago
திருப்புவனம்:திருப்புவனம் திரவுபதி அம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். இக்கோயிலில் ஆடி திருவிழா ஆக.,6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக.,9 ல் திருக்கல்யாணம் நடந்தது.
அம்மன் கூந்தல் விரிப்பு, முடிப்பு போன்ற அம்மன் பற்றிய நினைவு நிகழ்வுகளும் நடந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பூக்குழி இறங்கும் வைபவம் மட்டும் நடக்காமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முக்கிய நிகழ்வாக பக்தர்கள் கோயில் முன் அமைத்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.