உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் பட்டாளம்மன் கோவிலில் ரூ.5 லட்சம் காணிக்கை வசூல்

ஓசூர் பட்டாளம்மன் கோவிலில் ரூ.5 லட்சம் காணிக்கை வசூல்

ஓசூர்: கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கை யாக வழங்கிய பணம் எண்ணப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் நகரில், பழமையான பட்டாளம்மன் கோவில் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை வழங்க வசதியாக, அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப் பட்டுள்ளது. கடந்த, 2016ல் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதன் பின் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்படாமல் இருந்தது. உண்டியலில் காணிக்கை பணம் நிறைந்ததால், அதை திறக்க முடிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் (ஆக., 14ல்)திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில், ஐந்து லட்சத்து, 372 ரூபாய் காணிக்கை இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !