உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) வீடு வாங்கும் யோகம்

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) வீடு வாங்கும் யோகம்

இந்த மாதம் சூரியன், செவ்வாய், குரு சாதகமாக உள்ளனர். புதன் ஆக.21 முதல் செப்.7 வரை நன்மை தருவார். இதனால் லாபம் அதிகரிக்கும். வருமானம் அதிகமாக இருக்கும். கடந்த கால பின்னடைவுகள் மறையும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு.

குருபகவான் உங்கள் ராசிக்கு 9 ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவரால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணியாற்றுவீர்கள். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையனைத்தும் பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். இது தவிர குருவின் 9ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதிக்கு குறைவிருக்காது. புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஆக.21க்கு பிறகு  சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும்.  ஆடம்பர வசதிகள் பெருகும். சகோதரிகள்  ஆதரவுடன் செயல்படுவர். ஆக.18,19,20, செப்.15,16ல் பெண்களால் சுகவாழ்வு  அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.26,27ல் உறவினர்  வகையில் ஒதுங்கி இருப்பது நல்லது. அதே நேரம் செப்.10,11ல் அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். செப்.7க்கு பிறகு கணவன், மனைவி இடையே  மனக்கசப்புகள் வரலாம்.

பணியாளர்களுக்கு சூரியனால் பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வேலையில் பங்கம் இன்றி முன்னேறுவர். புதிய பதவியும் தேடி வரும்.  தனியார் துறையில் இருப்பவர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. ஆக. 21க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் அனுசரணையும், சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். செப்.7,8,9 ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செப்.7க்கு பிறகு விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். சம்பள உயர்வுக்கும் தடையிருக்காது.

வியாபாரிகள் சிறப்பான நிலை பெறுவர். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்வீர்கள். ஆக.21 க்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். ஆக.30,31ல் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.  

கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் செப்.10 க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள், இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியோடு நற்புகழும் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். சற்று உழைத்தாலும் வெற்றிக்கு உத்தரவாதம் கிடைக்கும். இந்த மாதத்தை பொறுத்தவரை ஆக. 21 முதல் செப். 7 வரை கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம்.  

விவசாயிகள் போதிய வருமானம் கிடைக்கப் பெறுவர். நெல், மஞ்சள், கரும்பு, சோளம், எள், கொள்ளு, கிழங்கு போன்ற பயிர்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் உயரும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும்.

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். ஆக.21க்கு பிறகு  சுபநிகழ்ச்சிகள்  கைகூடும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஆக.23,24,25ல் புத்தாடை, அணிகலன்கள் சேரும்.

* நல்ல நாள்: ஆக.18,19, 20,23,24,25,30,31, செப்.1,2,7,8,9,10,11,15,16   
* கவன நாள்: செப்.3,4 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்:
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
●  சுவாதியன்று லட்சுமி நரசிம்மர் வழிபாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !