உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை மாவட்ட அம்மன் கோயில்களில் ஆடி பூஜைகள்

சிவகங்கை மாவட்ட அம்மன் கோயில்களில் ஆடி பூஜைகள்

இளையான்குடி : சிவகங்கை மாவட்ட அம்மன் கோயில்களில் ஆடி கடைசி  வெள்ளியான நேற்று (ஆக., 16ல்) ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு பூஜைகளில் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி கடைசிவெள்ளிக்கிழமையை  முன்னிட்டு அம்மன் வெள்ளி அலங்காரத்தில், அருள் பாலித்தார்.  

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.தாயமங்கலம்  முத்துமாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறன்று அதிகமான  பக்தர்கள் வருவர். ஆடி மாதத்தில் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.  இந்தாண்டும், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு  வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்தனர்.கடைசி  வெள்ளியான நேற்று (ஆக., 16ல்) கோயிலைச் சுற்றிலும் ஆங்காங்கே பக்தர்கள் கூழ் ஊற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நேற்று (ஆக., 16ல்), காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு நாள் முழுவதும் பக்தர் களுக்கு அருள் பாலித்தார். உச்சிக்கால பூஜை ரத்து:

* திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று (ஆக., 16ல்) ஏராளமான பெண் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இந்த வருடம் ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில் நிர்வாகமும், போலீசாரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  
கோயில் வளாகத்தில் சவுக்கு கம்புகள் மூலம் தடுப்புகள் கட்டி பக்தர்களை  வரிசையாக அனுமதித்தனர்.

கோயிலின் நான்கு பிரகாரத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து  தரப்பட்டிருந்தது. நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் ஏராளமான பக்தர்கள்  அதிகாலை முதலே அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தனர். மதியம் ஒரு  மணி உச்சி கால பூஜைக்காக பக்தர்கள் காத்தி ருந்த போது பூஜை ரத்து  செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்ததால் பக்தர்கள் ஏமாற்றம்  அடைந்தனர். அம்மனை தரிசனம் மட்டும் செய்து சென்றனர். மடப்புரம்  கிராம த்தில் இறப்பு நிகழ்ந்ததால், உச்சி கால பூஜை ரத்து செய்யப்பட்டதாக  கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அம்மனுக்கு பாலாபிஷேகம் திருப்புத்தூர்: திருப்புத்துார் ராஜகாளியம்மன்  கோயிலில் நேற்று (ஆக., 16ல்) திரளாக பக்தர்கள் பால்குடம். தீச்சட்டி, அலகு குத்தியும்  காவடி எடுத்து வந்தனர். நேற்று (ஆக., 16ல்) காலை 9:00 மணி முதல் செட்டியதெரு மடத்திலிருந்து பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு வந்தனர். ராஜகோபுரம் முன் பூக்குழி இறங்கினர்.

பல பெண்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கினர். அம்மனுக்கு பாலாபிேஷகம்,  சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் வெள்ளிக் கேடகத்தில் சர்வ  அலங்காரத்தில் அம்மன் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானம்  நடந்தது. ஏற்பாட்டினை நிர்வாகம், விழாக்குழு மற்றும் செட்டியதெரு இளைஞர்  குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !