உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் ஆடி வெள்ளி பூஜை

தேனி கோயில்களில் ஆடி வெள்ளி பூஜை

தேனி : மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் நேற்று (ஆக., 16ல்) ஆடி கடைசி வெள்ளி க்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை  நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பங்களாமேடு மீனாட்சிசுந்தரேஸ்வரர்  கோயில், கணேச கந்தபெருமாள் கோயில், வேல்முருகன் கோயில்களில்  அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. கூழ் பிரசாரம்  வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

*கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத் தப்பட்டது. சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

துர்க்கையம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தன. காளியம்மன்  கோயிலில் பெண்கள் எலுமிச்சை பழத்தால் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அங்காள  பரமேஸ்வரியம்மன் கோயிலில் வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம்  வழங்கப்பட்டது. குறுவனத்துப்பாலம் அருகே உள்ள பகவதியம்மனை ஏராளாமான  பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபட் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !