அன்னுார் ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED :2290 days ago
அன்னுார்:அன்னுார் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அதிகாலை ஐயப்பனுக்கு சகல திரவிய அபிஷேகம், மஞ்சள், குங்குமார்ச்சனை வழிபாடுகளை தொடர்ந்து, ஸ்ரீ ஐயப்பனுக்கு மோகினி அலங்காரம் செய்யப்பட்டது.
சுவாமிக்கு பட்டாடை, ஆடை ஆபரணங்கள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மோகினி அவதாரத்தில் ஐயப்பன் காட்சியளித்தார். மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திரு விளக்கு வழிபாடு நடந்தது.
இதில் ஐந்து முக குத்துவிளக்குகளை ஏற்றி, மங்கலப்பொருட்களை சமர்ப்பித்து சுமங்கலி பெண்கள் ஐயப்பனை வழிபட்டனர். வழக்கமாக அம்மன் கோவில்களில் மட்டுமே நடைபெறும் ஆடிவெள்ளி உற்சவம், நேற்று ஐயப்பன் கோவிலில் நடந்தது.
அன்னுார் வட்டாரத்தில் திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். உபயதார ர்கள் மஞ்சள் சரடு, குங்குமம், மஞ்சள், வளையல் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை வழங்கினர்.