மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுதந்திர தின வழிபாடு
ADDED :2241 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி அம்மன், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது.
கலெக்டர் ராஜசேகர், சரவணன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 420 புடவை, 132 வேட்டிகளை ஏழை, எளிய, ஆதரவற்ற முதியோரு க்கு வழங்கினர். ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன் மற்றும் அதிகாரிகள்
செய்திருந்தனர்.