உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போத்தனுார் அருள் முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு

போத்தனுார் அருள் முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு

போத்தனுார்:போத்தனுார் சர்ச் ரோட்டிலுள்ள அருள்முருகன் கோவில்  வளாகத்தில், துர்க்கை அம்மன் சன்னதி உள்ளது. நேற்று (ஆக., 16ல்) ஆடி மாதம், ஐந்தாவது மற்றும் கடைசி வெள்ளிக் கிழமை ஆகும்.

இதற்காக, அம்மனுக்கு வளையலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில், திரு விளக்கு பூஜை நடந்தது.  100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். முன்னதாக  காலையில் மூலவர் முருகனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.  தட்சிணாமூர்த்தி, சிவன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் பூஜை நடந்தது.  ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !