உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடம் ஆடி வெள்ளி நிறைவு பக்தருக்கு அன்னதானம்

பல்லடம் ஆடி வெள்ளி நிறைவு பக்தருக்கு அன்னதானம்

பல்லடம்:ஆடி வெள்ளிக்கிழமை நிறைவு நாளை முன்னிட்டு, பல்லடம்  மாகாளியம்மன் கோவிலில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆடி மாத ஐந்தாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பல்லடம் மாகாளியம்மன்  கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்,  மாகாளி அம்மனுக்கு அபிஷே கம், மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

மகா தீபாராதனையை தொடர்ந்து, பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்களுக்கு, வளையல், மஞ்சள், குங்குமம், மற்றும் மாங்கல்ய சரடு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.  தொடர்ந்து, பக்தர்களுக்கு, வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், பிரசாதம் மற்றும்  அன்னதானம் வழங்கப்பட்டது.எம்.எல்.ஏ., நடராஜன் துவக்கி வைத்தார்.  வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !