உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுார் விளந்தை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

திருக்கோவிலுார் விளந்தை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவில்  பிரம்மோற்சவ த்தில் நேற்று 16ம் தேதி செடல் உற்சவம் நடந்தது.

கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 16ம் தேதி செடல் உற்சவம் நடந்தது.

காலை 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேக, அலங்காரம்,  தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படையல்  வைத்தனர்.மாலை 4:00 மணிக்கு தென்பெண்ணையில் சக்தி கரகம்  அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு  குத்தி வந்தனர். ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன் கோவில் வளாகத்தில்  அமைக்கப்பட்டிருந்த செடலில் செம்மறி ஆட்டிற்கு அலகு குத்தி சுற்றப்பட்டது.  தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம்  பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !