உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிப்பட்டு நாதாதீஸ்வரர் குளம் குளத்தை தூர் வார கோரிக்கை

பள்ளிப்பட்டு நாதாதீஸ்வரர் குளம் குளத்தை தூர் வார கோரிக்கை

பள்ளிப்பட்டு: தண்ணீர் மட்டம் குறைந்துள்ள நிலையில், கோவில் குளத்தை துார்  வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிப்பட்டு அடுத்த, கரிம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது, ஞானாம்பிகை  உடனுறை நாதா தீஸ்வரர் கோவில். திருமண தலமான இங்கு, ஆண்டு முழுவதும்,  திருமணங்கள் நடத்தப் படுகின்றன.திருத்தணி முருகர் கோவில்  தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக் கப்பட்டு வருகிறது. கோவிலின்  எதிரே, வற்றாத குளம் உள்ளது. தற்போது, இந்த குளத்தில் நீர்மட்டம் வெகுவாக  குறைந்துள்ளது.துார் வாரி பராமரிக்காததால், குளத்தில் மண்டிக் கிடக்கும்  சேற்றில் கோரை புற்கள் ஏராளமாக முளைத்துள்ளன. அல்லியும், தாமரையும்  மலர்ந்திருந்த குளம், தற்போது கோரை புற்களால் களை இழந்து  நிற்கிறது.கோவிலுக்கு வரும், சிவ பக்தர்கள் குளத்தை துார் வாரி சீரமைக்க  வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !