உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் சிவ - விஷ்ணு கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

திருவள்ளூர் சிவ - விஷ்ணு கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

திருவள்ளூர் : திருவள்ளூர், சிவ -- விஷ்ணு கோவிலில், 108 திருவிளக்கு பூஜை,  நேற்று நடந்தது. திருவள்ளூர், சிவ -- விஷ்ணு கோவிலில், ஆடி மாத கடைசி  வெள்ளியை முன்னிட்டு, நேற்று 16 ல், காலை, பூங்குழலி அம்மன், பத்மாவதி தாயார்  ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மாலை, 108 திருவிளக்கு  பூஜை நடந்தது. இதில், பெண்கள் பங்கேற்று, திருவிளக்கு ஏற்றி, வழிபட்டனர்.  மாலையில், மகா தீபாதரானை நடந்தது.தொடர்ந்து, கோவில் உட்பிரகார த்தில்,  திருத்தேர் உலா வந்தது. இதில், பூங்கா நகர், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள  பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !