உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி சகாய மாதா ஆலய தேர்பவனி

காரைக்குடி சகாய மாதா ஆலய தேர்பவனி

காரைக்குடி : காரைக்குடி செக்காலை புனித சகாயமாதா ஆலய திருவிழா  தேர்பவனி நேற்று (ஆக., 18ல்)  நடந்தது.ஆலயத்தில் ஆக.,9 அன்று கொடியேற்றத்துடன் விழா  துவங்கியது.

தினமும் மாலை ஜெபமாலை, சிறப்பு திருப்பலி நடந்தது. பங்கு தந்தை எட்வின்  ராயன், திருத் தொண்டர் கிளாட்வின் தலைமை வகித்தனர். தேவகோட்டை  ஆனந்தா கல்லுாரி செயலாளர் கிறிஸ்டிசேசுராஜ் முன்னிலை வகித்தார். தர்மபுரி  மறைவட்ட பங்கு தந்தை அதிரூபன் திருப் பலி நடத்தினார். விழாவின் முக்கிய  நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு தேர்பவனி நடந்தது.  ஆலயத்தில் இருந்து 100 அடி ரோடு, செக்காலை, கல்லுாரி சாலை வழி யாக  மீண்டும் ஆலயம் வந்தது. பங்கு இறைமக்கள் பங்கேற்றனர்.

நேற்று (ஆக., 18ல்) காலை திருவிழா நிறைவு திருப்பலி நடந்தது. அதை தொடர்ந்து சிறுவர், சிறுமியருக்கு புது நன்மை வழங்கப்பட்டது. திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !