பரமக்குடியில் ஆடிக்கஞ்சி வார்ப்பு விழா
ADDED :2240 days ago
பரமக்குடி : பரமக்குடி திருவள்ளுவர் நகரில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், மனித நேயம் சிறக்க செவ்வாடை பக்தர்கள் நுாற்றுக்கணக்கானோர் கஞ்சிக் கலயம், அக்னி சட்டி ஏந்தி சென்றனர்.
இலக்குமணன் குருவடியார் தலைமை வகித்தார். அங்காளபரமேஸ்வரி அம்மன் அறங்காவலர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார்.இந்து ஆலய பாதுகாப்பு மாநில அமைப்பாளர் சுடலைமணி, ராமநாதபுரம் மாவட்ட இந்து ஆலய பாதுகாப்பு இயக்க தலைவர் கண்ணன்சிவா கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மல்லிகா, முத்துச்செல்வி, குணா செய்திருந்தனர்.