உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு காளை விநாயகர் சிலைகள்

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு காளை விநாயகர் சிலைகள்

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு காளை விநாயகர் சிலைகள் தயாரிப்பு,  புதுக்கோட்டையில் தீவிரமாக நடந்து வருகிறது.

நாடு முழுவதும், செப்., 2ல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.  புதுக்கோட்டை மாவட் டம், மழையூர், பொன்னமராவதி, துவரடிமனை ஆகிய  பகுதிகளில், விநாயகர் சிலைகள் தயாரிப்பு, மும்முரமாக நடக்கிறது.

ஆர்வம்களிமண்ணால், 10 அடி உயரம் வரை, சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரி க்கப்படும் சிலைகள், சுற்றுச்சூழலை பாதிக்காது என்பதால், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், இங்கு வந்து, விநாயகர் சிலைகள் வாங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு காளை விநாயகர் சிலைகள் புதிதாக செய்யப்படுகின்றன. இவற்றை வாங்குவதில், பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வரவேற்பு: துவரடிமனையைச் சேர்ந்த, மண்பாண்ட கலைஞர் சங்கர்  கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் கேட்கும்  வகையில், வித்தியாசமாக சிலை களை செய்து கொடுக்கிறோம். தற்போது,  ஜல்லிக்கட்டு காளை விநாயகர், ஏர் ஓட்டும் விநாயகர் சிலைகளுக்கு நல்ல  வரவேற்பு உள்ளது.இதேபோல, 20க்கும் மேற்பட்ட வடிவங் களில், விநாயகர்  சிலைகள் செய்து வருகிறோம். களிமண் கிடைக்காததால், இந்த தொழில், மிகவும்  நலிவடைந்து வருகிறது. தமிழக அரசு, களிமண் எடுக்க உரிய அனுமதி, நிதியுதவி,  களிமண் பொருட்கள் விற்பனை செய்ய சலுகைகள் வழங்க வேண்டும்.  தமிழகத்தை விட, வெளிமாநிலங்களில் மண்பாண்டங்களுக்கு நல்ல வரவேற்பு  உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !