கடலுக்குள் கண்ணன்
ADDED :2261 days ago
கம்சனுக்கு பெண் கொடுத்தவர் ஜராசந்தன். மருமகன் கம்சனைக் கொன்ற கண்ணனை அழிக்க, தன் படைகளை மதுரா நகரின் மீது தொடர்ந்து 18 முறை போர் தொடுத்தான். இதனால் அங்கிருந்த யாதவர்கள் பாதிக்கப்பட்டனர். கடலுக்குள் இருந்த தீவு ஒன்றுக்கு மக்களை குடி அமர்த்தினான் கண்ணன். அதுவே ’துவாரகா’ எனப்பட்டது. காலப்போக்கில் அது அழிந்தது. குஜராத்தில் உள்ள இத்தீவில் தான் புகழ் மிக்க ’துவாரகா நாத்ஜி’ கோயில் கட்டப்பட்டது.