உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழபாடியில் மார்ச் 31ல் நந்தி திருமண உற்சவம்

திருமழபாடியில் மார்ச் 31ல் நந்தி திருமண உற்சவம்

அரியலூர்: திருமழபாடி சிவன் கோவிலில் வரும் 31ம் தேதி நந்தி திருமண உற்சவம் நடக்கிறது. அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாத ஸ்வாமி கோவில் உள்ளது. "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே என தொடங்கும் பிரசித்தி பெற்ற சுந்தரர் தேவாரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்கள் பாடப்பெற்ற இத்தலம், வசிஸ்டர், அகஸ்தியர் உள்ளிட்ட முனிவர்களால் பூஜிக்கப்பட்டதாகும். வரலாறு மற்றும் புராண பெருமை மிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் நந்தியெம்பெருமான் திருமண உற்சவம், வழக்கமான குதூகலத்துடன் வரும் 31ம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடக்கிறது. பக்தி சிரத்தையுடன் நடக்கவுள்ள இத்திருமண உற்சவத்துக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அலுவலர் மணி, தக்கார் ராமமூர்த்தி மற்றும் ஆன்மீக பெரியோர்கள் பலரும் செய்து வருகின்றனர். திருமண திருவிழா உற்சவத்தை முன்னிட்டு, தென்னக கலை பண்பாட்டு மையம் சார்பில், கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !