உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்த்துங்கள் நலமுடன் வாழலாம்!

வாழ்த்துங்கள் நலமுடன் வாழலாம்!

* பிறருக்கு வாழ்த்து சொன்னால், நலமுடன் வாழலாம்.
* மனம் போன போக்கில் செல்லாதீர். அறிவு காட்டும் வழியில் செல்லுங்கள்.
* உள்ளத்தில் அன்பு இருந்தால் வீடும், நாடும் உயர்வு பெறும்.   
* இன்முகத்துடன் பழகினால் உலகமே நம் வசப்படும்.   
* கடமையை அதற்குரிய காலத்தில் செய்தால் நிம்மதியுடன் வாழலாம்.  
* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு. இதுவே உத்தமர் இயல்பு.
* எதிரியால் தீமை வருவது இயல்பு. ஆனால் அவர் நண்பராகிவிட்டால் தீராத தொல்லை.
* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வை கெடுக்கும்.
* ஆராய்ச்சி இல்லாத நம்பிக்கை என்பது, தாழ்ப்பாள் இல்லாத கதவு போன்றது.
* ஒழுக்கம் ஒன்றே உயர்வுக்கான வழி. ஒழுக்கத்தை காக்கும் கவசமே திருமணம்.
* பகைமையை வைத்துக் கொண்டு வாழ்த்த முடியாது. வாழ்த்தும் போது பகைமை இருக்காது.
* தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவுமில்லை. தீர்க்கும் வழியை அறியாமல் பலர் இருக்கிறார்கள்.
* கோபத்தால் யாரும் திருந்துவதில்லை. ஒருவேளை எதிராளி பயப்படலாம். ஆனால் திருந்தியிருக்க மாட்டார்.
* எந்த சூழ்நிலையிலும் ஒருவருக்கு கோபம் வரவில்லை என்றால், ஞானம் வந்து விட்டதாக பொருள்.
* விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே மேன்மை அடையும் வழி.
* ஆசையை அடியோடு ஒழிக்க முடியாது. அதை சீர்படுத்தினால் போதுமானது. - சொல்கிறார்  வேதாத்ரி மகரிஷி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !