உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவழும் கண்ணன்

தவழும் கண்ணன்

கர்நாடக மாநிலம், மளூர் என்னும் திருத்தலத்தில் நவநீதகிருஷ்ணன் கோயில் உள்ளது.  இங்கு குழந்தை வடிவில் தவழ்ந்துகொண்டிருக்கும் கிருஷ்ணரின் திருவுருவம் கரு நிறக்கல்லில் உருவானது. இந்த அபூர்வ விக்ரகத்தில் கிருஷ்ணனின் பாதங்களில் சங்கு -சக்கர ரேகைகள் உள்ளதைக் காணலாம். கையில் வெண்ணெய் உருண்டையுடன்  உள்ள குழந்தை கிருஷ்ணனின் கழுத்தில் முத்துமாலை, புலிநக மாலை அசைந்தாடும்  விதத்திலும், இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் சலங்கைப்பட்டையின் ஒலி கேட்கும்  விதத்திலும் கருநிறக்கல்லாலான ரேகைகளுடன் அற்புதமாகக் காட்சிதருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !