சங்கராபுரம் அடுத்த பொய்க்குனத்தில் மாரியம்மன் தேர் திருவிழா
ADDED :2239 days ago
சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த பொய்க்குனத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் 19ம் தேதி காலை காத்தவராயன், ஆரியமாலா திருமணம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், பிற்பகல் 2:00 மணி க்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை பொய்க்குனம் கிராம மக்கள் செய்திருந்தனர்.