உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு வரதராஜ பெருமாள் கோவிலில், மகா கும்பாபிஷேகம்

நடுவீரப்பட்டு வரதராஜ பெருமாள் கோவிலில், மகா கும்பாபிஷேகம்

நடுவீரப்பட்டு:பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி ,பூமாதேவி சமேத  வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் 19ம் தேதி மகா  கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவை முன்னிட்டு, கடந்த 18ம் தேதி, மாலை விநாயகர் பூஜை, வாஸ்து  சாந்தி, கும்பலங்காரம் நடந்து, இரவு 7:00 மணிக்கு முதல் கால யாகசாலை  பூஜை நடந்தது. இரவு 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. நேற்று  முன்தினம் 19ம் தேதி திங்கள்கிழமை காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 9:30 மணிக்கு யாகசாலையில் வைத்துள்ள கலசங் கள் ஆலய உலாவாக வந்து 10:10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !