புதுச்சேரி வல்லப கணபதி சுவாமி கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தி
ADDED :2349 days ago
புதுச்சேரி: வல்லப கணபதி சுவாமி கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நேற்று 20ம் தேதி நடந்தது.முத்திரையர்பாளையம் டாக்டர் தனபால் நகரில், வல்லப கணபதி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நேற்று 20ம் தேதி நடந்தது.
இதனையொட்டி, வல்லப கணபதிக்கு, பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவியங் களால், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.வல்லப கணபதிக்கு மலர்களால் சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.