உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழிநீர் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

செங்கழிநீர் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் செங்கழிநீர் பிள்ளையார்  கோவிலில் மஹா சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பாலாபிஷேகம்  நடந்தது.

காட்டுமன்னார்கோயில் அருள்மிகு செங்கழிநீர் பிள்ளையார்  திருக்கோயிலில் மஹா சங்கட ஹரசதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு 200  லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா  தீபாராதனை நடைப்பெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பிள்ளையாருக்கு 108 தேங்காய்கள்  உடைக்கப்பட்டு, பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !