உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் 350 இடங்களில் தேசபக்தி விநாயகர் சிலைகள்

ராமநாதபுரம் 350 இடங்களில் தேசபக்தி விநாயகர் சிலைகள்

ராமநாதபுரம் : மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் தேச  பக்தியைவலியுறுத் தும் 350 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.  இந்தாண்டு ’தெய்வீக தமிழை காப்போம், போலி தமிழின வாதத்தினை  ஒழிப்போம்,’ என்றகருப்பொருளில் இந்து முன்னணி யினர்  செயல்படவுள்ளனர்.

தமிழகத்தில் செப்.,2 ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 350 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

இது குறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர்ராமமூர்த்தி கூறியதாவது: இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி தின கருப்பொருளாக ’தெய்வீக தமிழை காப்போம், போலி தமிழின வாதத் தினை ஒழிப்போம்’ என்ற தலைப்பில் கொண்டாடப்படவுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 350 இடங்களில் தேசபக்தியை வலியுறுத்தும் விதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் விழுப்புரம், பழநி, திருச்செந்துார் ஆகிய பகுதிகளில் வடிவமைக்கப்பட்டு ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கு வண்ணங்கள் தீட்டும்பணிகள் நடந்து வருகிறது. 3 முதல் 6 அடி வரையிலான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவை.பிளாஸ்டோ பாரிஸ் கொண்டு சிலை அமை க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.செப்., 3ல் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் நடக்கவுள்ளது. செப்., 4ல் ராமநாதபுரம், தேவிப்பட்டி னம், திருப்புல்லாணி, ஏர்வாடி ஆகிய பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. செப்.,5 ல் சாயல்குடியில் ஊர்வலம் நடக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !