தேனியில் ரக் ஷா பந்தன் விழா
ADDED :2277 days ago
தேனி : தேனி அம்பி வெங்கடசாமி நாயுடு மண்டபத்தில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஐஸ்வர்ய விஸ்வ வித்யாலயா சார்பில், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக் ஷா பந்தன் விழா நடந்தது.
மூத்த ராஜயோக ஆசிரியை செல்வி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை துவக்கினார். தேனி கிளை நிலைய பொறுப்பு சகோதரி விமலா, வயர்லெஸ் இந்தியா நிறுவன உரிமையாளர் சொர்ணலதா, மனநல டாக்டர் ஆனந்தி, அரவிந்த் மருத்துவமனை மேலாளர் கவுரி முன்னிலை வகித்தனர். மூத்த ராஜயோக ஆசிரியை, இறை சக்தியின் மூலம் பொன்னுலகம்’ எனும் தலைப்பிலும், ராக்கிக்கயிறு அணிவிப்பதின் மகத்துவம் குறித்தும் விளக்கினார். ஜென்மாஷ்டமியின் ஆன்மிக ரகசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் வாழ்த்தினார். ஏராளமானோர் பங்கேற்றனர்.