உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பங்குனி உத்திர கொடியேற்றம்!

பழநியில் பங்குனி உத்திர கொடியேற்றம்!

பழநி: சரண கோஷத்துடன், பழநி பங்குனி உத்திர கொடியேற்றம் நடந்தது. ஏப்., 5 ல், தேரோட்டம் நடக்கும். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து திருஆவினன்குடிக்கு, முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று, விநாயகர் பூஜை, அஸ்த்ர தேவர் காப்புக்கட்டுதல், கலச பூஜை நடந்தது. கொடிப்படம், திருஆவினன்குடி வெளிப்பிரகாரம் சுற்றி வந்தது. திருமுறை பாடல்கள் இசைக்க, காலை 9.55 மணிக்கு, சரண கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. பெரியநாயகி அம்மன் கோயிலில் கால சந்தி பூஜையிலும், மலைக்கோயிலில் உச்சிக்காலத்திலும் காப்புக்கட்டப்பட்டது. வேணுகோபாலு எம்.எல்.ஏ., கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையர்கரசி, சித்தனாதன் சன்ஸ் பழனிவேல், கந்தவிலாஸ் செல்வக்குமார், பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து பங்கேற்றனர். மாலையில் யாகசாலை, இரவு பலிபீட பூஜை நடந்தது. ஆறாம் நாளான ஏப்., 4 ல், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு வெள்ளித் தேரோட்டம் நடக்கும். மறுநாள் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !