அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் உறியடி உற்ஸவம்
ADDED :2274 days ago
அலங்காநல்லுார் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி
உறியடி உற்ஸவம் நடந்தது. உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் கோயில் உட்பிரகாரத்தை சுற்றிவந்து வெளியில் உள்ள உறியடி மண்டபம் முன் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து உறியடி நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தனர்.