ரெட்டியார்சத்திரத்தில் வழுக்கு மரம் ஏறும் விழா
திண்டுக்கல் : ரெட்டியார்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறுதல், உறியடி திருவிழா நடந்தது.ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் மலைக் குன்றில் கோபிநாதசுவாமி கோயில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.
அதன் பின், மலையில் இருந்து புறப்பட்ட சுவாமி எல்லைப்பட்டி, எர்ணம்பட்டி, முத்துராம் பட்டி, குளத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, தோப்புப்பட்டி, டி.புதுப்பட்டி, எஸ்.வாடிப்பட்டி, எஸ். அய்யம்பட்டியில் திருக்கண் காணும் நிகழ்வு நடந்தது. நேற்று 26ம் தேதி ரெட்டியார்சத்திரம் கொத்தப்புளி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலுக்கு சுவாமி வந்தடைந்தார்.
அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதையொட்டி 40 அடி நீள வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. அதைத்தொடர்ந்து உறியடி திருவிழாவும் நடந்தது. இன்று 27ம் தேதிகாலை மீண்டும் சுவாமி மலைக்கு திரும்பும் நிகழ்வு நடக்கிறது.