உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்!

திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்!

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் ஆகியவற்றில், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை, முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின், நாழிக்கிணறு மேற்கு பகுதியில், 72 லட்ச ரூபாய் செலவிலும்; கிழக்கு பகுதியில், 87 லட்ச ரூபாய் செலவிலும், பஸ் நிலையங்களும்; 38 லட்ச ரூபாய் செலவில், பக்தர்கள், பயணிகள் நிழலகம்; கோவிலின் நான்கு இடங்களில், 18 லட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர விளக்குகள்; 31 லட்ச ரூபாய் செலவில் குளியலறை மற்றும் ஆண், பெண் கழிப்பறைகளும் அமைக்கப் பட்டுள்ளன. சுற்றுலாத் துறையின் நிதியுதவியுடன், இந்த திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. அதேபோல், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அருகில், பசுப்பட்டி தோப்பில் கான்கிரீட் தளம், ஆண், பெண் கழிப்பறை மற்றும் குளியலறைகள்; ஓட்டுனர்களுக்கான ஓய்வறை; உயர் கோபுர மின் விளக்குகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம்; மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. கோவில் நிதி, 67 லட்சம் மற்றும் சுற்றுலாத் துறை நிதி 24 லட்சம் என, மொத்தம், 91 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !