உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் பேப்பர் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு

பரமக்குடியில் பேப்பர் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு

பரமக்குடி: பரமக்குடியில் கைத்தறி நெசவாளர் பாஸ்கரன், பேப்பர் உள்ளிட்ட நீர்நிலைக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களால் விநாயகர் சிலைகளை செய்து வருகிறார்.

பரமக்குடி சுந்தர்நகரை சேர்ந்தவர் பாஸ்கரன், 56. பூர்வீகமாக கைத்தறி நெசவுத்தொழிலை செய்து வருகிறார்.

சிறுவயது முதல் நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பில் ஈர்ப்பாகி அவர் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு சென்று கட்–அவுட்களை நிறுவுவது வழக்கம். இந்நிலையில் 20 ஆண்டு களுக்கும் மேலாக பரமக்குடி பெருமாள் கோயில், முருகன் கோயில் என பல்வேறு கோயில் களில் புரட்டாசி மற்றும் விசேஷ நாட்களில் பேப்பரில் சிலைகளை செய்து கொடுத்து வருகிறார்.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக  2 அடி முதல் 10 அடிக்கும் மேல் உயரத்தில் விநாயகர் சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்ள்ளார்.

இந்த ஆண்டும் மூங்கில் குச்சிகள், நுால், பேப்பர், கிழங்கு மாவு உள்ளிட்ட எளிதில் நீர்நிலை களில் கரையும் வகையிலான பொருட்களை கொண்டு சிலைகளை தயார் செய்கிறார். எவ் வளவு பெரிய சிலைகளாக இருப்பினும் இருவர் மட்டுமே எளிதாக துாக்கிச் செல்ல முடியும்.

மேலும் ஊர்வலம் நிறைவில் நீர் நிலைகளில் எளிதாக கரையும் தன்மை கொண்டதாக உள்ளது. விலையானது உயரம் மற்றும் வேலைப்பாடுகளைப் பொறுத்து 2000 ரூபாய் 8000 வரை பெற்றுக்கொள்கிறார்.

பாஸ்கரன் கூறியதாவது: சிவாஜி கணேசன் படம் வெளியாகும் போது கட்–அவுட்கள் செய்த ஆர்வமானது, சுவாமி சிலைகள் வரை செய்ய என்னை  துாண்டியது.  இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கைத்தறி நெசவுத்தொழிலை இரண்டு மாதங்கள் வரை செய்யாமல், சதுர்த்தி ஊர்வல த்திற்காக சிலைகளை செய்து கொடுத்து வருகிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !