உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ’விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பலமா இருக்கணும் பாதுகாப்பு’

’விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பலமா இருக்கணும் பாதுகாப்பு’

கோவை : ’உரிய முன்னெச்சரிக்கையுடன், விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என்று, போலீஸ், வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான, சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம், நேற்று 27ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, சிலைகள் அமைக்கப்படவுள்ள இடங்களில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்ய வேண்டும்.விநாயகர் சிலைகள், மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதித்த, கரையக்கூடிய சாயம் மட்டுமே பூசியிருக்க வேண்டும்.

காகிதக்கூழ், களிமண்ணால் ஆன சிலைகள் மட்டுமே வைக்கப்பட வேண்டும்.சிலை ஊர்வல ங்கள், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். பொது அமைதி, பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கத்துக்காக, வருவாய்த்துறை, போலீசார் கூறும் நிபந்தனை களை, அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் பாலாஜி சரவணன், கலால் துணை ஆணையர் கலைவாணி, ஆர்.டி.ஓ.,க்கள் தனலிங்கம், ரவிக்குமார், சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !