தயாராகும் விநாயகர் சிலைகள்
ADDED :2242 days ago
திருமங்கலம் : செப்., 2 நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக திருமங்கலத்தில் விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முகாமிட்டுள்ள வடமாநிலத்தவர்கள் அரையடி முதல் 12 அடி வரை உயரமுள்ள பலதரப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். ரூ.30 முதல் 30 ஆயிரம் வரையிலான விலையில் இச்சிலைகள் விற்கப்படுகின்றன. இச்சிலைகளை திருமங் கலம் மட்டுமின்றி வெளிமாவட்டத்தினரும் வந்து வாங்கி செல்கின்றனர்.சிலைகளில் தயாரிப் பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகையில், ’சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாக்பீஸ் பவுடர்கள், கிழங்கு பவுடர்கள் பயன்படுத்தி சிலைகளை செய்கிறோம். இதனால் அதிகளவில் மக்கள் வாங்கி செல்கின்றனர்,’ என்றனர்.