ராமேஸ்வரம் நடராஜர் கோயிலில் மண்டலாபிஷேகம்
ADDED :2242 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நடராஜர் தியான திருக்கோயிலில் மண்டலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.தமிழக விஷ்வஹிந்து பரிஷத் சார்பில் ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் நடராஜர் தியானதிருக்கோயில் அமைத்து, ஜூலை 8 ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று 28ல் மண்டலாபிஷேகத்தை யொட்டி, கோசுவாமி மடத்தில் வேத விற்பன்னர் கள் யாக பூஜை, பூராணஹூதி பூஜை செய்தனர்.
பின் நடராஜர் சிலைக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் எஸ்.வேதாந்தம், ராமேஸ்வரம் வி.ஹெச்.பி., நிர்வாகி ராமசுப்பு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் அன்னதானம், பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது.