உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பகவதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கடலுார் பகவதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கடலுார் : கடலுார், மஞ்சக்குப்பம், வில்வராயநத்தத்தில் உள்ள பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி கடந்த 22ம் தேதி காலை 7:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வசனம், மஹாசங்கல்பம் ,கணபதி, லட்சுமி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பிரவேசபலி பூஜை நடந்தது.23ம் தேதி கோபூஜை, தனபூஜை, சுமங்கலி பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை அங்குரார்ப்பணம், ரக் ஷா பூஜை நடந்தது. இரவு 8:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், யாகமண்டப பூஜை, வேதிகா கலச பூஜை, ஹோமகுண்ட பூஜை நடந்தது.

24ம் தேதி, யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. 25ம் தேதி காலை 6:00 மணிக்கு ஹோமங்கள், பிம்பசுத்தி, ரக்ஷ்ஷாபந்தனம், பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் ,கடம் புறப்பாடு நடந்தது.காலை 8:30 மணிக்கு விமான கோபுர கும்பாபிஷகம் நடந்தது. 9:15 மணிக்கு பகவதியம்மனுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !