மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரம்
ADDED :2247 days ago
மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.செப்டம்பர் 2ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
கோவில், வீடு, அலுவலங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம். மேலும், பல இடங்களில் பிரம்மாண்ட சிலைகளை வைத்து வழிபடுவர்.இதற்காக, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள், மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டில் தீவிரமாக நடந்து வருகிறது. காகித கூழால் ஆன விநாயகர் சிலைகள் 3 முதல் 6 அடி வரை தயாரிக்கப்படுகிறது. ரூ. 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விலை உள்ள சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.