உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடையில் ஸ்ரீ ஜெயந்தி விழா: திருமொழி பாசுரம் ஆராதனை

காரமடையில் ஸ்ரீ ஜெயந்தி விழா: திருமொழி பாசுரம் ஆராதனை

காரமடை:காரமடை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், ஸ்ரீ ஜெயந்தி  வைபவம் நடந்தது.காரமடை ரங்கநாதர் கோவில் அருகே மேட்டுப்பாளையம்  சாலையில், ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.

இங்கு, ஸ்ரீ ஜெயந்தி வைபவம் நடந்தது.விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி,  மூலவரு க்கு திருமஞ்சனம், கால சந்தி பூஜை, தொடர்ந்து புன்னியாகவசனம்,  விஷ்வக்சேனர் பூஜை, நவ கலச ஆவாகனம், பாமா, ருக்மணி சமேத சந்தான  வேணுகோபால சுவாமி, உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடந்தது.  தொடர்ந்து கண்ணனின் அவதார சிறப்பை கூறும், பெரியாழ்வார் திருமொழி  பாசுரங்கள் சேவித்து பின் சாற்றுமுறை, பிரசாதம் வழங் கப்பட்டது.ஞாயிறு  காலையில் பாமா, ருக்மணி சமேத சந்தான வேணுகோபாலன், திருக் கோவில்  எதிரே உள்ள துவஜஸ்தம்பத்தில், மஞ்சள் நீராடல் உற்சவம் நடைபெற்று, மங்கள  வாத்தி யங்கள் முழங்க, நான்கு மாட வீதிகளில் சுவாமி மங்கள வாத்தியங்கள்  முழங்க வலம்வந்தார்.இரவு உரியடி உற்சவம், திருவீதி புறப்பாடு  சாற்றுமுறையுடன் ஸ்ரீ ஜெயந்தி வைபவம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !