உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள்: உடுமலையில் ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள்: உடுமலையில் ஆலோசனை கூட்டம்

உடுமலை:விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று 30 ம் தேதி நடந்தது.வரும் 2 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. உடுமலையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.சிலைகள் வைக்கப்பட உள்ள இடங்கள், எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று 30ல் அனைத்து அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

கூட்டத்தில், போலீஸ் அனுமதியின்றி எந்த இடத்திலும் சிலைகள் வைக்கக்கூடாது. பதற்றம் நிறைந்த பகுதிகளில், பிற மதத்தினர் புண்படும் வகையில், விளம்பரப்பலகைகள், சுவரொட் டிகள் ஒட்டக்கூடாது.விசர்ஜன ஊர்வலம் போலீஸ் அனுமதித்த நேரத்தில் மட்டுமே நடத்தப் பட வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அமைப்பின் நிர்வாகியே அதற்கு பொறுப்பேற்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !