போடி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை
போடி: ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு போடி அருகே பிச்சாங்கரை கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் பழமையான கயிலாய கீழச்சொக்கநாதர் கோயி லில் நேற்று (ஆக., 30ல்) அமாவாசையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிவனுக்கு சிறப்பு அலங்காரத்தை போடி ஜமீன் பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர், திருப்பணி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்தனர். மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில் சுப்பிரமணியர் கோயில்.
வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயி லில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.