விருதுநகர் சாய்பாபா மந்திரில் வருஷாபிஷேகம்
விருதுநகர்: விருதுநகர் அருகே மீசலூர் விலக்கில் ஷீரடி சாய்பாபா மந்திர் அமைந்துள்ளது. இங்கு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, 108 சங்கு பூஜை, கலச பூஜை நடந்தது.
காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் ஸம்பத்ஸரா அபிஷேகம், கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு ஆரத்தியும் நடந்தது. அம்பாள் காபி உரிமையாளர் முத்துமணி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். தொடர்ந்து தீபாராதனை ஆர்த்தி அன்னதானம் நடந்தது.
வருஷாபிஷேகத்தை யொட்டி கோயில் வளாகத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. வெங்கடேஸ்வரா மிஷன் சேர்மன் ராகவன் நாயுடு வரவேற்றார். டில்லி போதை தடுப்பு பிரிவு துணை இயக்குனர் அறிவழகன் பேசினார். மின்துறை செயற்பொறி யாளர் அகிலாண்டேஸ்வரி, ஆடிட்டர்கள் ரமேஷ், குணசேகரன் பங்கேற்றனர்.
டாக்டர்கள் சுப்புலெட்சுமி, தனலெட்சுமி வந்திருந்த பக்தர்களை பரிசோதித்தனர். 600 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.