குடவரை கோவில்களில் வலம்புரி விநாயகர்: தொல்லியல் ஆய்வு மையத்தினர் தகவல்
திருப்பூர்:பிள்ளையார் பட்டியை போல், வலம்புரி விநாயகர் அருள்பாலிக்கும், தமிழக குடை வரை கோவில்களை, திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் பட்டியலிட்டுள்ளது.
திருப்பூரில் இயங்கும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக் குனர்கள் ரவிக்குமார், செந்தில்குமார், முத்துநாகு தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு சென்று, வலம்புரி விநாயகர் வீற்றிருக்கும், தமிழக குடவரை கோவில்களில் ஆய்வு நடத்தி யுள்ளனர்.ஆய்வு மைய நிர்வாகிகள் கூறியதாவது:புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்க ளில், அரிட்டாப்பட்டி, மலையக்கோவில், குடுமியான்மலை, சேவல்பட்டி, மலையடிப்பட்டி, குண்ணாண்டார் கோவில் பகுதியில், பாண்டியர் கால குடைவரை கோவில்கள் உள்ளது.அங்கு, புடைப்பு சிற்பமாகவும், தனி சிற்பமாகவும், வலம்புரி விநாயகர் சிற்பங்கள் அமைந்துள்ளன. பிள்ளையார் பட்டிக்கு அடுத்ததாக, பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
தலையில், கரண்ட மகுடம், கையில் அங்குசம், மோதகம், ஆடை அணிகலன்களுடன், அழகிய சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், குடைவரை கோவில்கள் அனைத்தும் வரலாற்றுடன் பின்னி பிணைந்தவை.அதிலும், வலம்புரி விநாயகர் அருளாட்சி புரியும் தலங் கள் மிக சொற்பம். பிள்ளையார் பட்டியை போல், இக்கோவில்களின் சிறப்பு வெளிவராமல், குறுகிய வட்டத்திற்குள் இருந்துவிட்டது. இக்கோவில்கள், 1,200 முதல், 1,300 ஆண்டுகள் பழைமையானவை.இவ்வாறு, நிர்வாகிகள் கூறினர்.