பல்லடம் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED :2232 days ago
பல்லடம்:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நகர இந்து முன்னணி சார்பில், காப்பு கட்டும் நிகழ்ச்சி, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் நடந்தது.வரும், 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா, கொண்டாடப்படுகிறது.
இதனை, இந்து முன்னணி உட்பட இந்து அமைப்பினர், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். அவ்வகையில், பல்லடம் நகர இந்து முன்னணி சார்பில், 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
விழா சிறப்பாக நடைபெற வேண்டி, முன்னணி தொண்டர்கள் காப்பு கட்டி கொண்டனர்.
திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள் பங்கேற்று காப்பு கட்டி கொண்டனர். காப்பு கட்டுவதை முன்னி ட்டு, பொங்காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.