திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு :3 மாவட்ட போலீசார் ஆலோசனை
திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மூன்று மாவட்ட போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.வரும் செப்., 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இந்து முன்னணி உட்பட பல் வேறு இந்து அமைப்பினர் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், திருப்பூர் எஸ்.பி., அலுவலக த்தில் நேற்று நடந்தது. கார்த்திகேயன், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா தலைமை வகித்தனர். மூன்று மாவட்ட எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தியொட்டி பணியில் ஈடுபட உள்ள போலீசார், விசர்ஜன ஊர்வலத் தில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு பணி, அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் சிலை வைக்க வேண்டும். அனுமதி அளிப்பதில் காலதாமதம் செய்யாமல், சம்பந்தப் பட்ட இடங்களை ஆய்வு செய்து வழங்க வேண்டும்.கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே, இந்தாண்டு சிலை வைக்க வேண்டும், புதிய இடத்தில் வைக்க கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்குள்ளான இடங்களை தீவிரமா கண்காணிக்க வேண்டும். ரோந்து வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.